இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா! உடனே ட்ரை பண்ணுங்க!
நம் அனைவருடைய வீட்டிலும் கொசு தொல்லை இருக்கின்றது. இதனை எவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே விரட்டி அடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடைகளில் கொசுக்கள் சம்பந்தமான மருந்துகளை நாம் வாங்கி பயன்படுத்தும் போது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகிறது.
அதனால் கடைகளில் வாங்குவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை தோலை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கட்டி சாம்பிராணியை பவுடர் ஆக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளில் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும். கம்ப்யூட்டர் சாம்பிராணியை பயன்படுத்தக் கூடாது.
இரண்டாவதாக கடுகு எண்ணெய் இந்த கடுகு எண்ணெய் ஆனது அனைத்து கடைகளிலுமே கிடைக்கும். அது மட்டுமின்றி எந்தவித நோயும் வீட்டில் இருப்பவர்களை தாக்காது. இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் உடையது.
ஒரு சின்ன தாளிப்பு கரண்டியில் மூன்று ஸ்பூன் அளவு கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவுக்கு நாம் வைத்திருக்கும் சாம்பிராணியை அந்த கடுகு எண்ணெயில் போட வேண்டும். பிறகு இதனை அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் காய்ச்ச வேண்டும். அது நன்கு காய்ச்சிய பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அந்த வெங்காயத்தை ஒரு ஊசியினால் குத்தி வெங்காயத்தின் அடியில் ஒரு நூலை போட்டு கட்டிக்
கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்தின் மீது நாம் தயார்படுத்தி வைத்திருந்த சாம்பிராணி எண்ணெயை மேலே தடவ வேண்டும்.
மேலும் அந்த வெங்காயத்தை ஜன்னல் ஓரங்கள் மற்றும் கதவு ஓரங்களில் கட்டி தொங்கவிட வேண்டும். இவ்வாறு 4 நாட்கள் செய்தால் போதுமானது. வீடு நறுமணமாகவும் மற்றும் கொசு தொல்லையை இருக்காது.