நாம் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.குறிப்பாக கசப்பு சுவை கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பாகற்காய்,சுண்டைக்காய்,அதலைக்காய் போன்றவை அதிக நன்மைகளை கொண்டிருக்கிறது.
இதில் அதலைக்காய் தோற்றத்தில் பாகற்காய் போன்று இருக்கும்.கடந்த காலங்களில் இந்த காயின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது இந்த காயின் பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருக்கின்றது.இந்த அதலைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
அதலைக்காய் ஊட்டச்சத்துக்கள்:
**துத்தநாகம் **பாஸ்பரஸ் **வைட்டமின் சி போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.
அதலைக்காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்:
1)சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பட அதலைக்காயை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இந்த காயை உலர்த்தி பொடித்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
2)இந்த அதலைக்காயை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு குணமாகும்.
3)குடலில் நாடாப்புழு,பட்டைப்புழு பிரச்சனை இருப்பவர்கள் அதலைக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
4)உடலிலுள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அதலைக்காயை உணவாக சாப்பிடலாம்.
5)கல்லீரலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை அகற்ற இந்த காயை ஜூஸாக செய்து பருகலாம்.
6)சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாக அதலைக்காயை உணவாக உட்கொள்ளலாம்.
7)வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து மீள அதலைக்காய் சாப்பிடலாம்.பாகற்காய் போன்றே அதலைக்காயிலும் பொரியல்,வறுவல்,கிரேவி செய்து சாப்பிடலாம்.