இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இது செய்த அடுத்த நொடியில் தலைவலி காணாமல் போகும்!!

0
263
#image_title

 

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இது செய்த அடுத்த நொடியில் தலைவலி காணாமல் போகும்!!

நம்மில் எல்லாருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை தலைவலி ஆகும். இந்த தலைவலிக்கு அதிகமாக மாத்திரகள் எடுத்திருப்போம். சிகிச்சை எடுத்திருப்போம். எல்லாம் தற்காலிக தீர்வை கொடுத்திருக்கும். இந்த பதிவில் தலைவலிக்கான நிரந்தர தீர்வை தரும் பாட்டி வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

தலைவலி என்பது இன்றைய காலத்தில் சாதாரணமாகிவிட்டது. தொடர்ந்து அதிக நேரம் தொலைகாட்சி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது, கணிணி பயன்படுத்துவது போன்ற காரணங்களால் தலைவலி வருகிறது. ஒற்றை தலைவலி என்பது எல்லாருக்கும் அதிகமாக வருகிறது. இந்த தலைவலியை எவ்வாறு சரி செற்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

தலைவலி குணமாக முதல் வீட்டு வைத்திய முறை…

 

கிராம்பு, சீரகம் இரண்டையும் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

 

தலைவலி குணமாக இரண்டாவது வீட்டு வைத்திய முறை…

 

தலைவலி குணமாக வெற்றிலையின் சாறு எடுத்து அதில் கற்பூரத்தை பொடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கி தலையில் பூசினால் தலைவலி குணமாகும்.

 

தலைவலி குணமாக அடுத்த மூன்றாவது வைத்திய முறை…

 

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காபி கொட்டைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதில் ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

 

தலைவலி குணமாக நான்காவது வைத்திய முறை…

 

தலைவலி குணமாக கிராம்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு இந்த கிராம்பை எடுத்து பேஸ்ட் மாதிரி அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

 

தலைவலி குணமாக ஐந்தாவது வீட்டு வைத்திய முறை…

 

தலைவலி குணமாக பிளாக் டீ அல்லது பிளாக் காபி அதாவது பால் சேர்க்காத டீ அல்லது காபியில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தலைவலி குணமாகும்.

 

தலைவலி குணமாக ஆறாவது வைத்திய முறை…

 

தலைவலி வரும் என்று தெரிந்தால் ஐந்து பாதம் பருப்பை உண்டால் தலைவலி வராது.

 

தலைவலி குணமாக ஏழாவது வைத்திய முறை…

 

தீராத தலைவலி உள்ளவர்கள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் தலைவலி குணமாகும். கொதிக்கும் தண்ணீரில் தேனை கலக்ககூடாது. குடிக்கும் அளவு தண்ணீர் சூடு ஆறிய பிறகு தேன் கலந்து குடிக்க வேண்டும்.

 

தலைவலி குணமாக எட்டாவது வைத்திய முறை…

 

தலைவலி குணமாக துளசி ஒரு சரியான அருமருந்து. ஒரு டம்ளர் தண்ணீருடன் நான்கு துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கு அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.

 

தலைவலி குணமாக ஒன்பதாவது வைத்திய முறை…

 

தலைவலி குணமாக உருளைக் கிழங்கையும் பயன்படுத்தலாம். உருளைக் கிழங்கை நுறுக்கி தலையில் ஒட்ட வைத்தாலும் சரி அல்லது உருளைக் கிழங்கை அரைத்து அதை தலையில் தடவினாலும் சரி தலைவலி குணமாகும்.

 

தலைவலி குணமாக பத்தாவது வைத்தியமுறை…

 

தலைவலி வருவதற்கு முக்கியமான காரணம் உடலில் நீர் சத்து குறைந்து உடல் சூடாவதால் தலைவலி வரும். அந்த சமயம் இரண்டு டம்ளரில் இருந்து மூன்று டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தலைவலி குணமாகும்.

Previous article2-3 நிமிடத்தில் உங்கள் உடல் சூடு சட்டென்ன குறையும்!! 100% உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!
Next articleஇதை மட்டும் செய்தால் போதும்!! இனி ஆயூசுக்கும் தைராய்டு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!