வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க இனி மாத்திரை சாப்பிட வேண்டாம்! இதை மட்டும் செய்தால் போதும்!
நம்முடைய வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழிந்து வெளியே வருவதற்கு இனி மாத்திரைகள் சாப்பிட வேண்டாம். அதற்கு சிறப்பாக உதவும் ஒரு மருந்தை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பது குறித்தும் எவ்வாறு அதை தயார் செய்வது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் நம்முடைய உடலை வெளிப்புறமாக எவ்வாறு கவனித்துக் கொள்கிறோமோ அதே போல உட்புறமாகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் நம்முடைய வயிற்றை முதலில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தமாக வைத்திருக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வயிற்றில் எந்தவித பூச்சிகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வயிற்றில் பூச்சிகள் இருந்தால் பலவிதமான வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பூச்சிகள் வயிற்றினுள் அரிப்பை ஏற்படுத்தி புண்களை உருவாக்கிவிடும். இதனால் வயிற்று வலி ஏற்படக்கூடும். மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படும். எனவே இந்த வயிற்றுப் பூச்சிகளை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* மாங்கொட்டை பருப்பு
* தேன்
நம்முடைய வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்க நாம். பூச்சி மாத்திரைகளை தான் சாப்பிட்டு வருகிறோம். இனி இந்த பதிவில் கூறப்பட்டிருப்பது போல செய்தால் போதும். வயிற்று பூச்சிகள் அனைத்தும் அழிந்து வெளியே வந்துவிடும். இதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
செய்முறை…
முதலில் மாங்காயில் இருக்கும் மாங்கொட்டையை எடுத்து அதில் இருக்கும் பருப்பை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பருப்பை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். மாங்கொட்டை பருப்பு நன்றாக காய்ந்த பின்னர் இதை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த பொடியில் தேன் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நன்றாக கலந்து விட்ட பின்னர் இதை அப்படியே சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழிந்து வெளியே வந்துவிடும்.