நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக தேங்கி இருந்தால் நிச்சயம் பல நோய் பாதிப்புகள் உருவாகிவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சிலர் மாத்திரை உட்கொள்கின்றனர்.இதனால் உடலில் பக்கவிளைவுகள் அதிகம் ஏற்படும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த சில ஆரோக்கிய வழிகளை பின்பற்றுங்கள்.
உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க எளிமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.அதிக எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகளை உட்கொள்ளலாம்.ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுங்கள்.தினமும் ஒரு மூலிகை பானங்களை பருகுங்கள்.
எலுமிச்சை பானம்,மிளகு பானம்,சீரக பானம்,செம்பருத்தி பானம்,வெந்தய பானம் போன்றவை உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை குறைக்க உதவுகிறது.அதேபோல் இஞ்சி பானம்,கருஞ்சீரக பானம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
தினமும் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.ஒட்டப்பயிற்சி செய்து வந்தால் சீக்கிரம் கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.பூண்டு பானம்,சியா பானம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க பெரிதும் உதவுகிறது.
டீ,காபியை தவிர்த்துவிட்டு க்ரீன் டீ செய்து குடிங்க.ஆரஞ்சு பழச்சாறு,தர்பூசணி சாறு போன்றவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.பட்டை தேநீர்,கிராம்பு தேநீர் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.உலர் பருப்புகளை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.வறுத்த,பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு உள்ள அசைவ உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
தினமும் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும்.பால் மற்றும் பால் பொருட்களை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.சாப்பிட்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.அதிகமாக சாப்பிடுவதையும் பசி இல்லாதபோது சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.