ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி பிளாஸ்டிக் இருக்க கூடாது!! தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!!

0
73

ஆவின் பால் விற்பனையில் பால் பாக்கெட்கள் முதல் பால் பொருட்கள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மாற்ற தென் மண்டல பசுமை தீர்ப்பாயமானது ஆவின் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

 

மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஏன் திட்டங்களை வகுக்க கூடாது என்றும் கேள்விகளை எழுப்பிய நிலையில் இதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஆவின் பால் பொருட்களான குளிர்பானங்கள், பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்கள் எப்படி பிளாஸ்டிக் பொருட்களில் வழங்கப்படுகின்றன. அந்த பிளாஸ்டிக் பாட்டிலை கடையில் கொடுத்து மீண்டும் மறுசுழற்சி செய்து கொள்ளலாம். இதனால் பிளாஸ்டிக் பேப்பர் குப்பைகள் குறையும். அதோடு எளிதாக பாலை கொண்டு செல்ல முடியும் போன்ற பல ஆலோசனைகளை தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழங்கியிருக்கிறது.

 

குறிப்பு :-

 

விரைவில் ரேஷனில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆவின் பால் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று பால் வளத்துறை தெரிவித்துள்ளது.

Previous articleஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!
Next articleஆஸ்திரேலியாவுக்கு விழுந்து பெரிய அடி..முக்கிய வீரர் விலகல்!! இந்திய அணி வாய்ப்பை பயன்படுத்துமா??