இனி பள்ளிகளில் அரசியலுக்கு வேலை இல்லை!! அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!!

Photo of author

By Gayathri

சமீப காலமாகவே தமிழகத்தில் குழந்தைகளை படிக்க வைக்கும் பள்ளியில் ஆசிரியர்களே குற்றம் புரியும் பின்னணி தொடர்ந்து அம்பலமாகி வருகின்றது. இதனால் பல பெற்றோர்களும், குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உண்டாகி வருகின்றனர். இன்றைய கால குழந்தைகளுக்கு பள்ளி கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியர்கள் குற்றங்களில் ஈடுபடுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. குழந்தைகள் என்று கூட பாராமல் தொடர்ந்து எழும் அம்பலங்களால் இதில் அரசியல் பங்கீடு இருக்குமோ என்ற பதட்ட சூழ்நிலையும் இதுபோன்ற சம்பவங்களால் ஏற்படுகின்றது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த சமீபத்தில் இந்த ஈன செயல்களின் ஈடுபடுபவரின் படிப்புச் சான்றிதழ் செல்லாதாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கவில்லை என்றால் அப்பள்ளி நிர்வாகம் கடும் தண்டனைக்கு உண்டாகும். அதுபோன்று பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை என்று பள்ளிகளில் அரசியலில் ஈடுபடுவோருக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாது. மேலும் பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு பள்ளி நிர்வாகம் தகவல் என்று அவர் தெரிவித்துள்ளார்.