பருப்பு வகைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.இதில் பாசிப்பருப்பு ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பாசி பருப்பை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு போதிய வலிமை கிடைக்கும்.செரிமானப் பிரச்சனை,பித்தம்,சருமம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் பாசி பருப்பை உணவாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
பாசிப்பருப்பு ஊட்டச்சத்துக்கள்:
**நார்ச்சத்து **வைட்டமின்கள் **தாதுப் பொருட்கள் **வைட்டமின்கள்
பாசிப்பருப்பு தோசை
தேவையான பொருட்கள்:-
1)பாசிப்பருப்பு – இரண்டு கப்
2)வெள்ளை அவல் – ஒரு கப்
3)சீரகம் – அரை தேக்கரண்டி
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு கப் பாசி பருப்பை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.
அடுத்து வெள்ளை அவலை மற்றொரு கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வைக்க வேண்டும்.மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து பின்னர் வடித்துவிட்டு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அரை தேக்கரண்டி சீரகம்,கால் தேக்கரண்டி மிளகு,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
பிறகு இந்த கலவையை கிண்ணத்தில் ஊற்றி தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கலந்துவிடலாம்.இதை அரை மணி நேரம் மூடி வைத்த பின்னர் தோசைக்கல்லில் தோசை வார்த்து எடுக்க வேண்டும்.
இந்த பாசிப்பருப்பு தோசைக்கு தக்காளி சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இந்த பாசிப்பருப்பு தோசை செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும்.