இந்தியா இப்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வேகம் எடுத்து வருகிறது. சாதாரண விஷயங்கள் தொட்டு பல்லாயிரக்கணக்கான பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகள் யுபிஐ ஐடியின் மூலம் மக்கள் எளிதாக பணம் அனுப்பவும் பெறவும் மற்றும் இதன்மூலம் பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்தவும் பயன்படுத்தி வருகின்றனர்.
Google pay மட்டுமின்றி போன் பே, பேடிஎம் மற்றும் பாரத் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை செயலிகளினுடைய சேவை கட்டணங்கள் கூட ஒரு சில முக்கிய விதிகளின்படி உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்பொழுது கூகுள் பேய் நிறுவனமானது தன்னுடைய சேவை கட்டணத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் google pay மூலமாக நாம் செலுத்தக்கூடிய கட்டணங்களுக்கு 0.5% முதல் 1% வரை சேவை கட்டணம் மற்றும் அவற்றிற்கான ஜி எஸ் டி சேர்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை கட்டணம் ஆனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இரண்டிற்கும் பொருந்தும் என்றும் உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கிரெடிட் கார்டு மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தும் பொழுது 15 ரூபாய் வரை சேவை கட்டணமாக பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சேவைகள் அனைத்திற்கும் தற்பொழுது google pay நிறுவனம் சேவை கட்டணங்களை அறிமுகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவும் அதற்கு காரணம் பணம் பரிமாற்ற சேவைகள் வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு இது நஷ்டமாக மாறியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.