இனி காசு செலவழித்து துணி சோப் வாங்க தேவையில்லை!! இனி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்!!
கெமிக்கல் சேர்க்காத வாஷிங் சோப் மற்றும் டிஷ்வாஷ் சோப் குறைந்த செலவில் தயாரிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமுறையில் தயாரிக்கப்படும் இந்த சோப் நம் கை, கால், தோலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
வாஷிங் சோப் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:-
1)காஸ்டிக் சோடா
2)வேப்ப எண்ணெய்
செய்முறை:-
ஒரு எவர் சில்வர் பாத்திரத்தில் ஒரு பாக்கெட் காஸ்டிக் சோடா சேர்க்கவும். இந்த காஸ்டிக் சோடா கையில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு கரண்டி கொண்டு கைவிடாமல் கலக்கி விடவும்.
இவ்வாறு செய்த பின்னர் காஸ்டிக் சோடா மிகவும் சூடாக இருக்கும். இதை நன்கு ஆறவிட்டு பிறகு அதில் 1/2 லிட்டர் வேப்ப எண்ணெய் ஊற்றி கைவிடாமல் 5 நிமிடங்கள் வரை கலக்கவும்.
இப்படி செய்தால் காஸ்டிக் சோடா மற்றும் வேப்ப எண்ணெய் சற்று கெட்டிப்படும்.
பிறகு இதை ஒரு சோப் மோல்ட் அல்லது பேப்பர் கப் இருந்தால் அதில் ஊற்றி நிழலில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
இவ்வாறு செய்தால் வாஷிங் சோப் தயராகி விடும். இந்த சோப்பை ஒரு வாரம் கழித்து பயன்படுத்தவும்.
டிஷ்வாஷ் சோப் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:-
1)பாமாயில்
2)தேங்காய் எண்ணெய்
3)காஸ்டிக் சோடா
4)எலுமிச்சை சாறு
5)அரிசி மாவு
செய்முறை:-
ஒரு எவர் சிலவர் பாத்திரத்தில் ஒரு பாக்கெட் காஸ்டிக் சோடா மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு கலந்து விடவும். 1/2 மணி நேரத்திற்கு அப்படியே விடவும்.
பிறகு அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 2 தேக்கரண்டி பாமாயில் சேர்த்து கைவிடாமல் நன்கு கலந்து விடவும்.
அடுத்து அதில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இவ்வாறு 20 நிமிடங்கள் வரை கலந்தால் கலவை கெட்டி தன்மை பெறும்.
இறுதியாக தேவையான அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஒரு சோப் மோல்ட் அல்லது பேப்பர் கப் இருந்தால் அதில் ஊற்றி ப்ரிட்ஜில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
இவ்வாறு செய்தால் டிஷ்வாஷ் சோப் தயராகி விடும். இந்த சோப்பை பயன்படுத்தி பாத்திரம் துலக்கினால் பாத்திரம் சுத்தமாகும். கைகளுக்கும் கெடுதல் ஏற்படாது