தற்பொழுதுதான் தமிழக மற்றும் இதர மாநிலங்களில் பொதுத்தேர்வு முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப பாட வரைமுறையில் மாற்றம் காணப்படும். தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் அரசு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்திலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கல்வித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளனர். அதில் மாணவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் வகுப்பிற்கு வரும் ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங் சொல்வதுண்டு. இதனை தற்பொழுது அவ் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது.
அந்தவகையில் ஹரியானா பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இனிவரும் நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் குட் மார்னிங், மற்றும் குட் ஆப்டர்நூன், என்பதற்கு பதிலாக “ஜெய்ஹிந்த்” என்று கூறவேண்மென தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாணவர்களிடையே நாற்றுப்பற்றை வளர்க்கலாம் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இனி வரும் நாட்களில் ஹரியானா வில் செயல்படும் அனைத்து பள்ளி மாணவர்களும் குட் மார்னிங், குட் ஆப்டர்நூன் என்பதை மாற்றி “ஜெய்ஹிந்த்” என முழக்கமிட இருப்பதாக கூறியுள்ளனர்.
இது மாணவர்கள் மத்தியில் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட உதவும் அதனை இந்த வயதிலிருந்து நாம் அவர்களிடம் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்பதாம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.