இனி வயிற்றை உள்வாங்க தேவையில்லை!! இதை மட்டும் குடியுங்கள் 14 நாட்களில் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் உருகிவிடும்!!

0
544
No more tummy tucks!! Just drink this and belly fat will melt like butter in 14 days!!
No more tummy tucks!! Just drink this and belly fat will melt like butter in 14 days!!

இனி வயிற்றை உள்வாங்க தேவையில்லை!! இதை மட்டும் குடியுங்கள் 14 நாட்களில் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் உருகிவிடும்!!

வயிற்றில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை இரண்டு வாரங்களுக்கு பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை
2)சீரகம்
3)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையை ஒரு கிண்ணத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.அதன் பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை அந்த கிண்ணத்தில் கலந்து விடவும்.

இந்த முருங்கை சாற்றை தினமும் காலையில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கொழுப்புகள் இரண்டு வாரத்தில் கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய்
2)எலுமிச்சை சாறு
3)தேன்

செய்முறை:-

முதலில் 5 பெரு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதன் விதையை நீக்கி விடவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து விடவும். பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை அந்த கிளாஸில் கலந்து விடவும்.

இந்த நெல்லிக்காய் சாற்றை தினமும் காலையில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கொழுப்புகள் இரண்டு வாரத்தில் கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம்
2)இஞ்சி
3)எலுமிச்சை சாறு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த ஓமம்,இஞ்சி துண்டு மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை கலந்து விடவும்.

இந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கொழுப்புகள் இரண்டு வாரத்தில் கரைந்து விடும்.