ட்விட்டர் இனி வேண்டாம் த்ரெட்ஸ் போதும்!! மெட்டா அதிரடி அறிவிப்பு!!
ட்விட்டர் என்ற இணையதள நிறுவனத்தை எலான் மாஸ்க் இயக்கி வருகிறார். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தற்போது த்ரெட்ஸ்வை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்று தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து இதன் மூலம் ட்விட்டர் போல தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும் என்றும் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஒரு கருத்தில் 500 வார்த்தைகளை பதிவிட முடியும். இதில் டிவிட்டரை விட அதிக வசதிகள் உள்ளது. இதனை பற்றிய தகவலை மெட்டா சொந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ட்விட்டரில் கட்டணம் செலுத்திய ப்ளு டிக் பயனாளர்களுக்கு மட்டும் இலவசமாக டெக்கு கிடைக்கும். மேலும் இந்திய உட்பட பல நாடுகளில் த்ரெட்ஸ் ஆப் ios மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புகைப்படம், 5 நிமிட வீடியோக்களை இதில் எளிதாக பதிவு செய்து கொள்ள முடிவும். மேலும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா த்ரெட்ஸ்வை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.