இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

0
240

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

இனிவரும் காலங்களில் நடிகர் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட எதையும் பயன்படுத்த முடியாது என ரஜினி சார்பில்  வழக்கறிஞர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பல்வேறு நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினிகாந்தின் குரல் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தும் போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

1. ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதி இன்றி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தளங்கள் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அவரது அனுமதி இன்றி பயன்படுத்தி வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே உரிய அனுமதி இன்றி வர்த்தக ரீதியாக அவரது குரல் புகைப்படம் பயன்படுத்தினால் உரிமையியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில நிறுவனங்கள் பிரபலம் அடைய ரஜினிகாந்தின் ஒப்புதல் இன்றி அவரது குரல் புகைப்படத்தை பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள், வந்ததை அடுத்து ரஜினி சார்பில் பாரதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

Previous articleபாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! 
Next articleதமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!