பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! 

0
372

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரம் இதுதான்! 

அஜித்தின் துணிவு படத்தின் வசூல் விவரத்தினை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் தான் துணிவு. இது கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியிடப்பட்டதால் இரு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது.

இரண்டு படங்களுமே பொதுவாக கலவையான விமர்சனங்களையே பெற்றன. குடும்பப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட வாரிசு திரைப்படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவையும், ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த துணிவு இளைஞர்களின் ஆதரவையும் பெற்றன. பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் துணிவு படம் கலக்கியது.

வாரிசு படத்தின் வசூல் விவரத்தை அந்த படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்ட நிலையில் துணிவு படத்தின் வசூல் விபரம் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் அஜித் படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது.

துணிவு படம் வெளியிடப்பட்டு 17 நாட்களை கடந்துவிட்ட நிலையில் உலகம் எங்கும் துணிவு படம் ரூ 225 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் அஜித்தின் திரை பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் துணிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகுட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்
Next articleஇனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here