இனி தடுப்பூசிகள் போடப்படாது! அதிரடி உத்தரவு!
குழைந்தைகளுக்கு தடுப்பூசி அவர்களின் எதிர்ப்பு சக்திகாக போடப்படுகிறது.ஆனால் இந்த தடுப்பூசி குழந்தைகளின் உயிரை பரிப்பதாக மாறிவிட்டது.கோவையில் பீளமேடு மக்காளிபாளையத்தை சேர்ந்தவர்கள் பிரசாந்த் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி.இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது.தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு தங்களது மக்காளிபாளையத்திலுள்ள அங்கன்வாடிக்கு அழைத்து சென்றார்கள்.
குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து சிங்கநல்லூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பிரசாந்த் மற்றும் விஜயலட்சுமி புகார் அளித்தனர்.பிரேத பரிசோதனையில் குழந்தை நிமோனியா காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது.
தடுப்பூசியால் குழந்தை இறக்கவில்லை என்று உறுதியாகும் நிலையில் அடுத்ததாக தடுப்பூசி போட்ட குழந்தையும் இறந்து விட்டது என தகவல் வந்தது.கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியருக்கு வெற்றிமாறன் என்ற 2 ½ வயது குழந்தை உள்ளது.இந்த குழந்தைக்கும் மக்காளிபாளையத்தில் தடுப்பூசி போடப்பட்டது.இரவு தூங்கிய குழந்தை எழுந்திருக்கா காரணத்தினால் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.இவர்கள் காவல் துறையில் எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை.
இதுகுறித்து சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து பெண்டா ரோட்டா என்றழைக்கப்படும் ஒருவகை தடுப்பு மருந்தும் மற்றும் போலியோ சொட்டு மருந்து போடும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கோவை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.