இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Rupa

இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!

இனிவர இருக்கும் நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்தால் போதுமானது என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது.

தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறியதாவது,ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்தும் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் எனவும்,10 மணிநேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஐந்து நாட்கள் வேலை செய்து இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் எனவும் 8 மணிநேரம் வேலை செய்பவர்கள் 6 நாட்கள் வேலை செய்து ஒரு நாள்  விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எந்த வித  கருத்து வேறுபாடுகளும் இல்லை என கூறியுள்ளார்.இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.