திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

0
156

 

திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

 

திருமணப் பத்திரிக்கையில் பெயர் இல்லாத காரணத்தினால் தாத்தாவை வெட்டுக் கொலை செய்துவிட்டு பேரன் தலைமறைவு ஆகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காரியம்பட்டியில் 78 வயதான ஆச்சிமுத்து என்ற விவசாயி அவர்கள் வசித்து வருகிறார். விவசாயி ஆச்சி முத்து அவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

 

இரண்டு மகன்களுக்கும் மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில் மூன்றாவது மகன் காட்டுராஜா என்பவருக்கு தந்தை ஆச்சிமுத்து அவர்கள் திருமணம் வைத்துள்ளார். காட்டுராஜா அவர்களின் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட திருமண பத்திரிக்கையில் முதல் மகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயர் இடம் பெறவில்லை.

 

இதையடுத்து முதல் மகனின் மகன் மருதை என்பவர் தனது தாத்தா அதாவது விவசாயி ஆச்சிமுத்து அவர்களிடம் தனது தாய் மற்றும் தந்தை பெயரை ஏன் பத்திரிக்கையில் போடவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த ஆச்சிமுத்து அவர்கள் அதை பற்றி எனக்கு என்ன தெரியும். உன்னுடைய சித்தப்பாவிடம் கேட்டு தெரிந்துகொள் என்று கூறியுள்ளார்.

 

இதில் ஆச்சி முத்து அவர்களுக்கும் மருதை அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருதை அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாத்தாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

 

ஆச்சிமுத்து அவர்களின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்பொழுது அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த மருதை அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். மருதை வெட்டியதில் பலத்த காயம் அடைந்த ஆச்சிமுத்து அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த ஆச்சிமுத்து அவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மருதை அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

 

Previous articleபொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!
Next articleஉலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்?