ராமநாதபுரம் தென் மண்டலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைப் வழியாக இயக்க எரிவாயு விநியோகமானது மேற்கொள்ளப்படுவதற்கு பைப்பினைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பைப் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கப்படும் பட்சத்தில் சிலிண்டர்களின் தேவை இருக்காது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பைப் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் நிறுவனத்தை சுற்றி இருக்கக்கூடிய வீடுகளில் இயற்கை எரிவாயு கனெக்சன் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாகவும் இந்தியன் ஆயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பைப் வழியாக இயற்கை வாயுவை தங்கள் வீடுகளுக்கு பொறுத்துக் கொண்டார்கள் என்றால் ஒரு கிலோவிற்கு 86 ரூபாய் மட்டுமே செலவிருக்கும் என்றும் இந்த செலவானது சிலிண்டரை விட மலிவு விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருக்கக்கூடிய வீடுகளுக்கு பைபிள் வழியாக இயற்கை எரிவாயு கனெக்சன் கொடுக்கப்பட்டு விட்டால் அதனை தொடர்ந்து நெல்லைக்கும் இந்த வசதியை கொடுப்பதற்கான வேலைகள் தொடங்கப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேட் லிமிடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைப் கலெக்ஷனில் தங்களுடைய வீடுகளில் மக்கள் போட்டுக் கொண்டார்கள் என்றால் மின்சாரத்திற்கு எப்படி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மீட்டர் அளவீடு செய்யப்பட்ட பணம் வசூலிக்கப்படுகிறது அது போலவே இனி இயற்கை எரிவாயுவிற்கும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மீட்டர் அளவில் கொண்டு பயன்படுத்திய கேஸ் இருக்கு மட்டும் பணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.