பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

Photo of author

By Parthipan K

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

இன்று இந்த பதிவின் மூலம் எத்தனை வயதானாலும் நம் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று காணலாம். சுருங்கிய முகங்கள் பளிச்சென்று இருப்பதற்கும் அழகிய பொலிவான தோற்றம் பெறுவதற்கும் இந்த இரண்டு பொருட்கள் போதும்.

அதற்கு முதலில் முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் முல்தானி மெட்டி மற்றும் கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் அதனுடன் கற்றாழை சாறு சேர்த்துக் கொள்ளலாம். இதனை நன்கு கலந்த பிறகு 10 நிமிடம் மூடி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த 10 நிமிடத்தில் நம் முகத்தை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு நாம் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை நன்கு அப்ளை செய்ய கொள்ள வேண்டும்.

அதன் பிறகு 15 நிமிடங்கள் நன்கு காய விட வேண்டும். அதன் பிறகு அதனை கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் ,கரும்புள்ளி, கருவளையம் ,முகப்பரு, அனைத்தும் நீங்கி முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.