இனி பணம் எடுக்க ATM கார்டு தேவையில்லை!! ஜஸ்ட் QR கோர்டை ஸ்கேன் செய்தாலே போதும்!

0
149
No need for ATM card anymore!! Just scan the QR code!
No need for ATM card anymore!! Just scan the QR code!

இனி பணம் எடுக்க ATM கார்டு தேவையில்லை!! ஜஸ்ட் QR கோர்டை ஸ்கேன் செய்தாலே போதும்!

நம் இந்தியா மெல்ல மெல்ல டிஜிட்டல் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.நாட்டில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் காகித ரூபாய் தாளின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

அதேபோல் அனைத்து மக்களும் வங்கிகளில் கணக்கு தொடங்கி பணம் எடுக்க மற்றும் செலுத்த ATM கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக டெல்லி,மும்பை,தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தான் அதிகப்படியான ஏடிஎம் மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.

ATM மையத்தில் பணம் எடுக்க வேண்டுமென்றால் உங்களிடம் ATM கார்டு இருக்க வேண்டும்.ஆனால் தற்பொழுது ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இதற்கு கார்டுலெஸ் டிரான்ஸாக்ஷன் என்று பெயர்.

இந்த புதிய வசதி மூலம் பணம் எடுக்க அவசியம் உங்களிடம் மொபைல் இருக்க வேண்டும்.நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் பேங்கிங் செயலியை பயன்படுத்தி எந்தவொரு கார்டும் இல்லாமல் ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்க முடியும்.

மொபைல் பேங்கிங் செயலியின் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஏடிஎம் மையத்தில் இருந்து நேரடியாக பணம் எடுக்க முடியும்.தற்பொழுது இந்தியாவில் பல ஏடிஎம்களில் QR ஸ்கேன்கள்,பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் பணம் எடுப்பதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.மொபைல் மூலம் அனுமதி பெற்று பணம் எடுக்கும் முறை என்பதால் இந்த புதிய வசதி மூலம் உங்கள் பணத்திற்கு 100% பாதுகாப்பு கிடக்கிறது.ஆனால் இந்த QR ஸ்கேனிங் மூலம் ரூ.10,000 வரை மட்டுமே பணம் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.