இனி கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் தேவை!! ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு!!

0
85
No need for educational qualification and work experience!! Rural Development Department Notification!!
No need for educational qualification and work experience!! Rural Development Department Notification!!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற பணிகளுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கல்வித் தகுதி தேவை என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இருக்கக்கூடிய இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக எழுத்தர் போன்ற பதவிகளுக்கும் இந்த பதவிகளுக்கான உயர்வுக்கும் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் போன்றவை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி தகுதி :-

✓ இளநிலை உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச பொது கல்வித்தகுதி (எஸ்எஸ்எல்சி தேர்ச்சி)

✓ பதிவுறு எழுத்தர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

✓ மேலும், 3 மாதங்களுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் இளநிலை உதவியாளர் வேலையில் பயிற்சி பெற வேண்டும்.

குறிப்பு :-

டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்தின் மூலம் நேரடியாக நிரப்பப்படும் நேர்முகத எழுத்தர் (பி.சி) பதவிக்கு பட்டப்படிப்பும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் ஹையர் கிரேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

Previous articleதிமுக-வின் அடுத்த அரசியல் வாரிசு இவர் தான்.. இதற்காகத் தான் நின்றேன்!! மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!!
Next article2026யின் விஜய் அரசியலுக்கு செக் வைத்த அஜித்.. முக்கிய இடத்தை பிடித்த உதயநிதி!!