இனி முக்கத் தேவையில்லை.. நாள்பட்ட மலம் உடனே வெளியேற இதனை 1 முறை குடியுங்கள்!!
மலம் கழிப்பது பலருக்கும் பிரச்சனையிருக்கும். குறிப்பாக மலம் கழிக்கும் பொழுது ஒரு சிலருக்கு இறுகிப் போவதாலும் மலம் கழிக்காமல் இருப்பதாலும் வயிற்று வலி உள்ளிட்டவைகள் உண்டாகும். அதேபோல மலம் முழுதாக வெளியேறவில்லை என்ற உணர்வு உள்ளிட்டவைகள் பலருக்கும் இருக்கும். இது ஆரம்பத்தில் செரிமான பிரச்சனையில் உண்டாகுவது தான் நாளடைவில் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனென்றால் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய துரித உணவுகள் பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அதிகளவு எடுத்துக்கொள்வதனாலும் இந்த பிரச்சனை உண்டாகும்.இதனை எளிமையான முறையில் வீட்டிலேயே சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதை 1ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
சுக்கு பொடி 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதித்து வரும் வேளையில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கொதித்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் சுவைக்கு ஏற்ப சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
செரிமான பிரச்சனை மலச்சிக்கல் உள்ளிட்டவைகள் இருக்கும் பொழுது உணவு சாப்பிடுவதற்கும் முன் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.