இனி வலி நிவாரணி தேவையில்லை!!மூட்டு வலி முழங்கால் வலி 5 நிமிடத்தில் சரியாக இதை தடவுங்கள்!!

Photo of author

By Sakthi

இனி வலி நிவாரணி தேவையில்லை!!மூட்டு வலி முழங்கால் வலி 5 நிமிடத்தில் சரியாக இதை தடவுங்கள்!!

 

மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற உடல் வலிகளை 5 நிமிடத்தில் எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

இன்றைய காலத்தில் மூட்டு வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நாம் மருத்துவரை அனுகின்ல் அவர்கள் எலும்பு தேய்மானம் தான் இதற்கு காரணம் என்று கூறி கால்சியம் அதிகரிக்க கால்சியம் மாத்திரைகள் தருகின்றனர். இந்த கால்சியம் மாத்திரைகளை அதிகமாக நாம் சாப்பிடும் பொழுது நமது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது. இதனால் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

 

இயற்கையான முறையால் நம் உடலில் கால்சியத்தை அதிகப்படுத்த கால்சியம் நிறைந்த தேங்காய், நெல்லிக்காய், முருங்கை, எலுமிச்சை, ஆரஞ்சு, கிரைகள் போன்ற பொருள்களை சாப்பிட வேண்டும்.

 

வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை நாம் முழுவதுமாக நிறுத்த வேண்டும். வெள்ளை சர்க்கரையானது நம் எலும்புகளில் இருந்து கால்சியத்தை தனியாக பிரித்தெடுக்கும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம்.

 

மூட்டு வலியை குறைக்கும் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருள்கள்…

 

* புங்கெண்ணெய்

* வேப்பெண்ணெய்

* நல்லெண்ணெய்

* இழுப்பெண்ணெய்

* கடுகு எண்ணெய்

* பழுத்த எருக்க இலைகள்

* பச்சை கற்பூரம் அல்லது சூடம்

 

ஐம்பூட்டு எண்ணெய் தயார் செய்யும் முறை…

 

இந்த எண்ணெயை தயார் செய்ய மேற்கூறிய அனைத்து எண்ணெய்களையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

அதாவது வேப்பெண்ணெய் 100மிலி, புங்கெண்ணெய் 100மிலி, கடுகு எண்ணெய் 100 மிலி, நல்லெண்ணெய் 100 மிலி, இழுப்பெண்ணெய் 100 மிலி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து எடுத்து வைத்துள்ள 5 வகையான எண்ணெய்களையும் இந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

குறைந்த பட்ச தீயில் வைத்து இதை சூடாக்க வேண்டும். இது சூடாகும் பொழுது நுறைத்து பொங்கி வந்த பிறகு அந்த எண்ணெயில் மூன்று பழுத்த எருக்க இலைகளை ஒன்றிண்டாக கிழித்து போட்டு எண்ணெயை சூடாக்க வேண்டும்.

 

கொதித்த பிறகு இதை இறக்கி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் ஆறிய பிறகு இதில் பச்சை கற்பூரம் கிடைத்தால் போடலாம். கிடைக்கவில்லை என்றால் சாதாரண சூடம் போட்டுக் கொள்ள வேண்டும். நன்கு ஆறிய பிறகு இந்த எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

 

இதை எவ்வாறு பயன்படுத்துவது…

 

இந்த எண்ணெயை இரவு தூங்கச்செல்லும் முன்பு இந்த எண்ணெயை கையில் எடுத்து கடிகார முள் சுற்றும் திசையில் 11 முறை மூட்டாகளில் தேய்த்து விடவும். பிறகு கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் 11 முறை தேய்த்து விட வேண்டும். மறுநாள் காலையில் எண்ணெய் தேய்த்த இடங்களை வெந்நீரால் கழுவி விட வேண்டும். இதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் செய்தால் மூட்டுகளின் வலி குறையத் தொடங்கும்.