இனி ரேஷன் அட்டையே தேவையில்லை! அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த திட்டம் தற்போது வரை நடைமுறைப்படுத்தாததால் பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வருகின்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுவாகவே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் உத்தரப்பிரதேச கோயிகி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரேஷன் அட்டை இல்லாமலேயே நியாய விலை கடைகளில் சர்க்கரை, கோதுமை, அரிசி போன்ற பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் குடும்பங்கள் அரசு திட்டங்களை அணுகுவதை எளிதாக்கும் நோக்கில் குடும்ப ஐடி, ஏக் பரிவார் மற்றும் ஏக் பெஹ்சான் எனும் ஆன்லைன் போர் ட்டலை துவங்கியுள்ளது. யோகி அரசின் போர்டல் https://familyid.up.gov.in ரேஷன் கார்டு இல்லாத மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு தகுதி பெறாத குடும்பங்களுக்கு இலவசமாக அல்லது மலிவான ரேஷன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போர்டல் உதவியுடன் குடும்பங்கள் தங்களது அடையாள அட்டையை உருவாக்கி இதன் வாயிலாக அவர்கள் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் இந்த யோகி அரசின் குடும்ப ஐடி ஒரு குடும்ப ஒரு அடையாளம் போர்டலானது ரேஷன் அட்டைகள் இல்லாத குடும்பங்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழக அரசானது ஒரே நாடு ஒரே ரேசன் என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.