குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பும் ஹார்லிக்ஸை வீட்டிலேயே தாயார் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)கோதுமை – ஒரு கப்
2)பாதாம் பருப்பு – 50 கிராம்
3)நிலக்கடலை – 50 கிராம்
4)பால் பவுடர் – 50 கிராம்
5)கோகோ பவுடர் – ஒரு தேக்கரண்டி
6)ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
7)சர்க்கரை – அரை கப்
செய்முறை விளக்கம்:-
*முதலில் ஒரு கப் அளவு கோதுமை எடுத்து தண்ணீரில் இரண்டு முதல் மூன்று முறை அலசி எடுங்கள்.
*பிறகு இதை காட்டன் துணியில் பரப்பி ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
*கோதுமை நன்கு காய்ந்து வந்ததும் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கோதுமையை கொட்டி வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடுங்கள்.
*அதற்கு அடுத்து 50 கிராம் பாதாம் பருப்பை வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.அதேபோல் 50 கிராம் நிலக்கடலையை வாணலியில் போட்டு வறுத்து நன்கு ஆறவிடவும்.
*பிறகு மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து ஈரமில்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.அதில் வறுத்த கோதுமையை போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.[பிறகு இதை சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.
*அதற்கு அடுத்து வறுத்து வைத்துள்ள பாதாம் பருப்பு மற்றும் நிலக்கடலையை தனி தனியாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.பிறகு அரைத்த கோதுமை மாவு,பாதாம் பொடி மற்றும் நிலக்கடலை மாவை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
*அதன் பிறகு 50 கிராம் பால் பவுடரை மிக்ஸி ஜாரில் போட்டு அரை கப் வெள்ளை சர்க்கரை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இதை கோதுமை மிக்ஸில் கலக்கவும்.
*இறுதியாக வாசனைக்காக ஒரு தேக்கரண்டி கோகோ பவுடர் மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த ஹோம் மேட் ஹார்லிக்ஸ் ரெடி.இதை ஈரமில்லாத காற்று புகாத டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பச்சை வாசனை நீங்கியதும் பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தயார் செய்து வைத்துள்ள ஹோம் ஹார்லிக்ஸ் தேவையான அளவு சேர்த்து கலக்கி பருக வேண்டும்.