அசைவம் சாப்பிடுபவர்களுக்கு முட்டை பிடித்த உணவாக இருக்கிறது.முட்டையில் புரதம்,கால்சியம் போன்றவை அதிகளவில் உள்ளது.முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்றாலும் சிலர் விரும்புவதில்லைபுரதச்சத்து கிடைக்க முட்டை மட்டும்தான் சாப்பிட வேண்டுமென்று இல்லை.நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலும் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
முட்டைக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவுகள்:
1)வறுத்த கொண்டைக்கடலை
இதில் உயர்தர புரதம் நிறைந்து காணப்படுகிறது.50 கிராம் கொண்டைக்கடலையில் 8 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்து காணப்படுகிறது.இது தவிர நார்ச்சத்தும் இதில் நிறைந்து காணப்படுகிறது.தினமும் வறுத்த கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.கொண்டைக்கடலையை அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.
2)பாதாம் பருப்பு
இதில் நார்ச்சத்து,புரதம்,மெக்னீசியம்,வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.
3)பச்சை பட்டாணி
அதிக புரதம் நிறைந்த பொருட்களில் ஒன்று பச்சை பட்டாணி.இதை வேகவைத்து சுண்டல் போன்று சாப்பிடலாம்.முட்டைக்கு இணையான புரதம் இதில் இருந்து கிடைக்கிறது.
4)கருப்பு உளுந்து
கால்சியம்,புரதம் போன்றவை கருப்பு உளுந்தில் நிறைந்து காணப்படுகிறது.இந்த உளுந்தை ஊறவைத்து அரைத்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
4)வேர்க்கடலை
அதிக சுவை நிறைந்த வேர்க்கடலையை அவித்து அல்லது வறுத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.இது தவிர பன்னீர்,பூசணி விதை போன்றவற்றிலும் புரதம் நிறைந்திருக்கிறது.