இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்!

Photo of author

By Rupa

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்!

இட்லி அல்லது தோசைக்கு மாவு அரைக்க வேண்டும் என்றால் அரிசி உளுந்து இவை இரண்டையும் நன்றாக கழுவி குறைந்தது 5 மணி நேரமாக ஊறவைப்பர். பின்பு கொஞ்சம் பின் ஒன்றாக கிரைண்டரில் போட்டு அதனை தனியாக அரைத்து வைப்பது தான் வழக்கம். ஆனால் இவ்வேளையை வேலைக்கு செல்லும் பெண்களால் பார்க்க இயலாது. அவர்களுக்காக தான் இந்த இன்ஸ்டன்ட் இட்லி மாவு. இதை அரைத்து ஆறு மாதம் வைத்தால் கூட கெட்டுப் போகாது.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி நான்கு கப் ,உளுந்து ஒரு கப் ,வெந்தயம் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி கால் கப்.

ஒரு பாத்திரத்தில் நான் கப் இட்லி அரிசியை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக கழுவ வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள ஜவ்வரிசியின் கழுவ வேண்டும். இட்லி அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை நல்ல காட்டன் துணியால் வெயிலில் காய விட வேண்டும்.

அது நன்றாக காய்வது மிகவும் முக்கியம். இதனை அடுத்து ஒரு கப் உளுந்து மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனிடையே காய்ந்த ஜவ்வரிசி மற்றும் இட்லி அரிசி ஆகியவற்றையும் ஜாரில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பின்பு அரைத்து வைத்த இரண்டு மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான் ஈஸியான இன்ஸ்டன்ட் இட்லி மாவு ரெடி. உங்களுக்கு தேவையான பொழுது இந்த மாவை எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து இட்லியை ஊற்றிக் கொள்ளலாம். நாளை இட்லி சுட போகிறீர்கள் என்றால் இன்று இரவே மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.