இனி இரண்டு 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

மின் கணக்கீடானது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. அதிலும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதால் அதனை கழித்து மீதமுள்ள ரீடிங் குறித்துதான் மின்கட்டண தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதை மாற்றி ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு கொண்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

அதன்படி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தே பிறகு இனி இருமாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்த தேவை இருக்காது. மாறாக மாதம்தோறும் செலுத்தும் படியாக இந்த ஸ்மார்ட் மிட்டாய் இருக்கும் என கூறியுள்ளார். இது குறித்த ஆலோசனைக் கூட்டமானது செந்தில் பாலாஜி தலைமையில் அரங்கேறி உள்ளது.

மேற்கொண்டு இது குறித்த அவர் கூறுகையில், வரும் நாட்களில் விரைந்து ஸ்மார்ட் மீட்டர் ஆனது அமைக்கப்படும். அதேபோல கோடை காலங்களில் தடையில்லா மின்சார அளவு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். பெரும்பாலானோர் இந்த ஸ்மார்ட் மீட்டரை விரும்பவில்லை என்றே கூறுகின்றனர். மாதந்தோறும் மின் கட்டணம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு சுமையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளனர்.