இனி இப்படி மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

 

இனி இப்படி மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

தமிழக மின்சார வாரியமானது மக்கள் எளிமையான முறையில் மின் கட்டணத்தை செலுத்துவதற்காக பல புதிய அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஈ சேவை மையம் எனத் தொடங்கி நம் வைத்திருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமும் இருந்த இடத்திலேயே மின்கட்டணத்தை செலுத்தலாம். இதனை மிகவும் எளிமையாக இருக்கும் விதமாக தற்பொழுது whatsapp மூலம் செலுத்தும் வசதியையும் தமிழக மின்வாரியம் கொண்டு வந்துள்ளது.

இனி வரும் நாட்களில் மின்கட்டணம் இறுதி வருவதற்கு தேதியின் மூன்று நாட்களுக்கு முன்பாகவே நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். மேற்கொண்டு அதில் கட்டுவதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். இவர்கள் whatsapp மூலம் தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று போன் பே அல்லது ஜி பே மூலம் தங்களது கட்டணத்தை செலுத்தலாம். இந்த அதிகாரப்பூர்வ தளமானது பச்சை குறியீட்டுடன் காணப்படும்.

இந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு முன் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிலுள்ள வியூ பில் ஆப்ஷன் சென்று பார்க்கலாம். இதைப் பார்த்த பின்பு கூட கட்டணத்தை செலுத்தலாம். நுகர்வோருக்கு ஏற்றவாறு மின்வாரியம் அவ்வபோது இதுபோல பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.