இனி ரயில் டிக்கெட்டிற்கு கையில் இருந்து பணம் கட்ட தேவையில்லை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
சென்னை வாசிகள் பெரும்பாலும் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி வருவதால் பெரும் சிரமம் அடையும் சூழல் ஏற்பட்டதை அடுத்து முதலமைச்சர் போக்குவரத்து குழுமத்தின் மூலம் ஆலோசனை நடத்தி மூன்றிற்கும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பயணம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறினர்.
அந்த வகையில் தற்பொழுது குறிப்பிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு அல்லது கியூ ஆர் கோட் உபயோகம் செய்து ஊழியர்கள் இன்றி டிக்கெட் வாங்கி கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது.இதனால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கும் சிரமம் குறைவதுடன் சில நேரங்களில் ஊழியர்கள் இருந்ததால் டிக்கெட் பெற முடியாமல் அவதி படும் சூழலும் குறையும்.
எனவே மக்கள் அதிக புழக்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இனிவரும் நாட்களில் மக்கள் தங்கள் ஸ்மார்ட் கார்ட் வைத்திருந்தால் அதில் ரீசார்ஜ் செய்து இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அல்லது தங்களது செல்போன் மூலம் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி முன்பதிவு இல்லா பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர். மேலும் டிக்கெட் அனைத்து மொழிகளிலும் பிரிண்ட் செய்து கொடுக்கும் வசதியும் உள்ளது என தெரிவித்துள்ளனர்.