1 ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை.. இந்த 1 ஜூஸ் போதும் சிறுநீரக பிரச்சனையை சரி செய்ய!!
மிகப்பெரிய செலவு இல்லாமல் நம் கிட்னியை சுத்தம் செய்து விடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் கொத்தமல்லி இலையில் ஜூஸ் செய்து குடித்தால் போதும். கிட்னி சுத்தமாகி விடும்.
கொத்த மல்லியின் மூலம் ஜூஸ் தயாரித்து குடிப்பதால் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்கள் முழுமையாக வெளியேறுகிறது. மேலும் இது சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கின்றது. கொத்தமல்லியானது கிரியேட்டின் அளவை குறைக்கின்றது. மேலும் இது இரத்தத்தில் சீரம் யூரியா மற்றும் யூரியா நைட்ரஜனையும் குறைக்கின்றது.
இந்த பச்சை கொத்தமல்லியில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்துகள், இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை கொத்தமல்லியில் அதிக அளவு உள்ளது. கொத்தமல்லியானது உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கின்றது. கொத்தமல்லியை பயன்படுத்துவதால் நாம் பலவிதமான நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறோம்.
இது மட்டுமின்றி சிறுநீரக நோயாளிகளுக்கு கொத்தமல்லி பெரும் நன்மைகளை அளிக்கின்றது. கொத்தமல்லி கிட்னியை சரியான முறையில் சுத்தம் செய்து அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
கொத்தமல்லி கொடுக்கும் சிறுநீரக ஆரோக்கியம்
நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதில் சிறுநீரகத்தின் முக்கிய பங்கு உள்ளது. சிறுநீரகத்தை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் கொத்தமல்லியை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக பிரச்சனை உங்களுக்கு இருந்தால் பச்சை கொத்தமல்லியை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நச்சுக்களை நீக்கும் கொத்தமல்லி ஜூஸ்
கொத்தமல்லியில் ஜூஸ் செய்து குடிப்பதால் சிறுநீரகத்தில் இருக்கீம் நச்சுக்கள் நீங்கி சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருக்க உதவி செய்கிறது. கொத்தமல்லியில் கொரியாண்ட்ரம் சாடிவம் என்னும் சாறு உள்ளது. இந்த கொரியாண்ட்ரம் சாடிவம் சிறுநீரகத்தில் இருக்கும் ஹிஸ்டாலஜிக்கல் புண்களை குணப்படுத்துகின்றது.
கொத்தமல்லியானது ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்களுடன் நெஃப்ரோப்ரோடெக்டிவ் பைட்டோ கெமிக்கல் செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றது. இதனால் சிறுநீரகமானது சரியான முறையில் சுத்தம் அடைகின்றது.
கொத்தமல்லி ஜூஸ் தயாரிக்கும் முறை
ஒரு கொத்தமல்லி கட்டை எடுத்து அதன் இலைகளை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதை இறக்கி ஆறிய பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு விட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வர வேண்டும். இவ்வாறு கொத்தமல்லி இலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தாலே சிறுநீரகப் பிரச்சனைகள் குணமாகும்.
இந்த கொத்தமல்லி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் நல்ல பலன்கள் கிடைக்கும். கொத்தமல்லியானது கல்லீரல் செயல்பாட்டையும், குடல் இயக்கத்தையும் ஊக்குவிக்கின்றது.
கொத்தமல்லியானது வயிற்றின் வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தையும் அதிகரிக்கின்றது. இதனால் உடல் பருமன் குறைவது மட்டுமில்லாமல் கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றது.