கிரீன் டீயை இப்படி குடித்தால் 10 நாளில் உங்கள் உடல் எடை மளமளவென குறையும்

Photo of author

By Rupa

கிரீன் டீயை இப்படி குடித்தால் 10 நாளில் உங்கள் உடல் எடை மளமளவென குறையும்

உடல் எடையை குறைப்பதற்கு மக்கள் பெரும்பாலும் கிரீன் டீயை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். உடனடியாக பலனை பெற கிரீன் டீயை சிலர் அதிகமாக குடிக்கிறார்கள்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை போல அளவுக்கு அதிகமாக கிரீன் டியை குடித்தால் அதிக தீங்கை விளைவிக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க கிரீன் டீயை எவ்வாறு குடிக்க வேண்டும் என்று தெரிந்து பிறகு அதை பயன்படுத்துங்கள்.

உடல் எடையை குறைக்க கிரீன் டீ பயன்பாடு

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை பராமரித்து வைப்பதா பெரிய சவாலாக இருக்கிறது. இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்வு முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் மக்கள் பலருக்கும் உடல் எடையை அதிகரித்து வருகின்றது.

அது போலவே ஒரு இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதாலும் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதனால் மக்கள் அனைவரும் உடல் எடையை குறைக்க கிரீன் டீயை குடிக்க வேண்டும் என்று நம்புகின்றனர்.

இதனால் கிரீன் டீயின் போக்கு அதிகரித்து வருகின்றது. உடல் எடையை குறைக்க கிரீன் டீ ஒரு வரப்பிரசாதம் என்று மக்கள் கருதுகின்றர். இந்த கிரீன் டீயை குடித்தால் உடல் எடை குறையுமா இல்லையா என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நம் உடலில் வளர்சிதை மாற்றத்தை திறம்பட செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க கிரீன் டீ உதவியாக இருக்கும். இந்த கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேட்டசின் எனப்படும் ஃபிளாவனாய்டுகள் உள்ளது. இந்த காஃபின் மற்றும் கேட்டசின் ஒரு வகையான ஆக்சிஜனேற்றங்களாகும்.

கிரீன் டீயில் உள்ள காஃபின் மற்றும் கேட்டசின் இந்த இரண்டு சேர்மங்களும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். அது போல கேட்டசின்கள் மற்றும் காஃபின் இரண்டு சேர்மங்களும் உடல் எடையை பயன்படுத்தும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

தினமும் கிரீன் டீயை குடிக்கும் அளவு

உடல் எடையை குறைக்க தினமும் எத்தனை கப் கிரீன் டீ குடிக்க வேண்டீம் என்று மக்களுக்கு மத்தியில் இப்போது கேள்வி உள்ளது. ஆராய்ச்சியின் படி ஒரு நாளுக்கு 2 முதல் 3 கப் வரையில் சூடான கிரீன் டீயை குடிக்க வேண்டும். இவ்வாறு கிரீன் டீயை குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். இந்த அளவு ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

தினமும் எவ்வளவு காஃபின் உட்கொள்கிறோம், உடலின் வளர்ச்சிதை மாற்றம் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து கிரீன் டீயில் பலவகை உள்ளது. இந்த அனைத்து வகை கிரீன் டீயும் எடை இழப்பிற்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும். குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட கிரீன் டீயில் உடலுக்கு தேவையான அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது.

பல நன்மைகள் இருந்தாலும் கிரீன் டீயை இதயநோய் உள்ளவர்களும் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் குடிக்க கூடாது. அவ்வாறு குடிக்க வேண்டுமென்றால் மருத்துவரை கேட்டு குடிக்க வேண்டும்.