’இனி எங்கும் அலைய வேண்டியதில்லை’..!! வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Photo of author

By Vinoth

’இனி எங்கும் அலைய வேண்டியதில்லை’..!! வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Vinoth

வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பட்டா என்பது சொந்த வீடு அல்லது நிலம் வைத்திருப்போருக்கான முக்கிய ஆவணமாகும். இந்த பட்டாவை வருவாய்த்துறை வழங்குகிறது. மேலும், இந்த பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்பெல்லாம் பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று நினைத்தால், இ – சேவை மையத்தையோ அல்லது தாலுகா அலுவலகத்தையோ நாட வேண்டும்.

ஆனால், தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் செய்ய முடியும். இதற்காக www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்றதும் முதலில் உங்கள் பெயர், மொபைல் எண், இ – மெயில் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து, உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் மற்றும் சப்-டிவிஷன் நம்பரை உள்ளிட வ்ணேடும். மேலும், இந்த நிலம் உங்களுடைய சொந்த நிலம் தான் என்பதற்கு சான்றாக கிரைய பத்திரம் போன்ற ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

கடைசியாக, உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு 60 ரூபாயும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் செய்தால் 460 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான். இதையடுத்து, உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்ததாக விஏஓ, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.