யாரும் இந்த வகை சீத்தாபழம் வாங்க வேண்டாம்!! சாப்பிட முடியாத அளவுக்கு புழுக்கள்!!

Photo of author

By Vinoth

யாரும் இந்த வகை சீத்தாபழம் வாங்க வேண்டாம்!! சாப்பிட முடியாத அளவுக்கு புழுக்கள்!!

Vinoth

Updated on:

No one should buy this type of cheetah!! Too many worms to eat!!

சேலம்: சீதாப்பழத்தில் வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள்,  கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்ட சீத்தாப்பழம், மிகவும் சுவையானது. பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற தேவையான ஆன்டிஆக்ஸிடென்ட்களை அதிகம் கொண்டது சீத்தாப்பழம்.

இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து, இந்தப் பழத்தை அருமருந்தாக்குகிறது. வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை என்பதும், எனவே  தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவை சாப்பிட வேண்டும் என்பதும்,  சமைத்த உணவில் வைட்டமின் சி சத்து போய்விடும் என்பதும் சீதாப்பழத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

தற்போது மார்க்கெட் மற்றும் பழக்கடையில் அதிகமாக ஒரு வகை சீத்தாப்பழம் வந்ததுள்ளது. இந்த பழம் உருவத்தில் மிக பெரியதாக உள்ளது. ஒரு பழம் குறைந்தது 5௦௦ கிராம் முதல் 7௦௦ கிராம் வரை இருக்கிறது. அப்படி அந்த பழத்தை பெரிதாக்க எத்தனை வகையான  மருந்துகள் உபயோகப்படுத்தியுள்ளனர் என்பது எல்லாம் அதன் எடையில் தெரிகிறது.

மேலும் இந்த வகை பழம் அதிகமாக சாலை வியாபாரிகளிடம் கிடைக்கிறது. இந்த பழத்தை பழுக்க வைத்தால் அது பழுப்பதில்லை மாறாக அதன் அடிப்பகுதியில் உள்ள கொம்பு அழுகி அதனுள்ளே புழுக்கள் வைத்து விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் பழம் பெரிதாக போடப்படும் ஊசிகள் தான்.

அந்தவகையில் இந்த வகை சீத்தாபழம் இப்படி கெட்டுப்போவதால் வாங்கி சென்ற யாரும் உண்பது இல்லை. எனவே இந்த வகை சீத்தாபழம் தடை செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த பழத்தை யாரும் வாங்க வேண்டாம் அதற்க்கு பதிலாக நாட்டு சீத்தாபழம் வாங்கி பயன்பெறலாம்.