இனி யாரும் ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிற்கே வரும் பொருட்கள்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

Photo of author

By Rupa

 

இனி யாரும் ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிற்கே வரும் பொருட்கள்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உகந்த மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வருடம் தோறும் புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மட்டும் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் காய்கறி மற்றும் இதர பொருட்களின் விலைவாசியை பொறுத்து அதனையும் மக்களின் நன்மைக்காக அவ்வபோது ரேஷன் கடைகளில் விற்று வருகின்றனர்.

குறிப்பாக வெங்காயம், தக்காளி இவை அனைத்தும் அதிக விலையில் விற்றபோது இதனை தமிழக அரசு கொள்முதல் செய்து மலிவான விலைக்கு மக்களுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வழங்கும் அறிவிப்பு குறித்து அமைச்சர் சங்கரபாணி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு எந்த ஒரு தொற்றும் பாதிக்காத வகையில் டோக்கன் முறையில் ஒவ்வொரு வீட்டிற்க்கே சென்று டோர் டெலிவரி மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.

இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனை நடைமுறை செய்யும் பொருட்டு மத்திய அரசானது ஜிஎஸ்டிக்கு விதிவிலக்கு செய்தால் கட்டாயம் இதுனை நடைமுறைப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி எடை போட்டு ரேஷன் பொருட்கள் வழங்குவதை விட பாக்கெட்டுகளில் வழங்குவதால் தரம் மற்றும் எடையில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதனால் பாக்கெட் செய்வதற்கு என்று ஆறு மில்கள் நிறுவ அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.

நியாயவிலை கடை பொருட்களை டோர் டெலிவரி செய்யும் முறையை முதன் முதலில் விஜயகாந்த் அவர்கள் தான் செயல்படுத்தினார். இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அவரது கனவு நினைவாகும் என அமைச்சர் கூறியுள்ளார். விரைவிலேயே டோர் டெலிவரி மூலம் அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.