இனி யாரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டாம்!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

Photo of author

By Gayathri

பெரும்பான்மையானோர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இந்துப்பு பயன்படுத்துவதில் உடல்நல கேடு ஏற்படும் என்று அதனை தற்போது யாரும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அதாவது இந்த உப்பில் போதிய அளவு அயோடின் கலக்கப்படவில்லை என்றும் அயோடின் கலக்கப்படாத உப்புக்களை பயன்படுத்தினால் அவை உடலில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

சமீபத்தில் நடைபெற்ற அயோடின் சத்து குறைபாடு தடுப்புக்கான தேசிய திட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சில முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அதில் அயோடின் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்துப்பு குறித்து விளம்பரங்களில் அதிக அளவு பேசப்படுவதாலும் இவற்றில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது என மக்கள் நம்பி தற்பொழுது சந்தை படுத்தப்படுதலிலும் விற்பனை செய்யப்படுதலிலும் அதிக அளவு புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக இந்து உப்பில் அயோடின் கலக்கப்படவில்லை என்றும் இதை சாப்பிடுவதால் மக்களுக்கு உடலில் குறைபாடுகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் இது போன்ற உப்புக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை தடுப்பதற்கு பொது சுகாதார துறையின் youtube பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோக்களும் சமூக வலைதள பக்கங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உப்பினுடைய தரத்தை உறுதி செய்து அதனை பொது சுகாதாரத் துறைக்கு பகிர வேண்டும் என தெரிவிக்கப்பட்டதோடு உப்பு நிறுவனங்கள் அனைத்துக்கும் இது குறித்த முக்கிய விழிப்புணர்வுகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பானது எடுத்துக் கொள்வது மக்களுடைய உடல்நிலை மட்டும் இன்றி மனநிலையையும் சீராக வைக்கும் என்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.