பத்திரப்பதிவு அலுவலகங்களில் இனி அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பற்றிய பதிவு செய்யப்படும் என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்களுக்கு ஐஜி உத்தரவிட்டிருக்கிறார்.
மூல பத்திரங்களின் உடைய நகல் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் உள்ள நகல்களை பயன்படுத்தி பத்திரப்பதிவானது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பதிவுத்துறையானது போலியாவணங்களை தடுப்பதற்காக இந்த முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
அசல் ஆவணங்களை கொண்டு பத்திர பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பதிவு சட்டப்பிரிவு 55A குறிப்பிட்டிருந்த நிலையில், ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்பவர்கள் கட்டாயமாக தங்களுடைய அசல் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சட்டத்தின் மூலம் தங்களுடைய அசல் ஆவணங்களை தொலைத்த பொதுமக்களால் தங்களுடைய சொத்துக்களை மீண்டும் பதிவு செய்ய இயலாது என்பதாலும் அவர்களுடைய சிரமத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் தற்பொழுது அசல் ஆவணத்தினுடைய நகலை வைத்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் துறையை சார்ந்தவர்கள் வைத்த கோரிக்கையின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த வழக்கில் நீதிமன்றம் ஆனது இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப்பதிவானது மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களை திருப்பி அனுப்பாமல் அவர்களுடைய நகல் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள நகல்களை வைத்து சரி பார்த்து அவர்களுக்கு பத்திரப்பதிவானது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு கூடுதல் ஐஜி உத்தரவிட்டுள்ளார்.