5வது போட்டியில் பண்ட் இல்லை.. உள்ளே வர போகும் புதிய வீரர்!! கம்பீர் திட்டம் என்ன??

Photo of author

By Vijay

cricket: திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடுத்து நடக்க உள்ள போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில்  உள்ள மொத்த போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

ஆனால் இந்திய அணி முதல் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.  ஆஸ்திரேலிய அணி 2-1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி வீரர்களில் மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. முன்னணி முக்கிய வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் அடுத்து நடக்க உள்ள 5வது போட்டியில் ரிஷப் பண்ட் இல்லை என்ற தகவல் வெளியாகி வருகின்றன.

4 வது போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முக்கியமான தருணத்தில் களத்தில் இருந்த ரிஷப் பண்ட் டிராவிஸ் ஹெட் வீசிய பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். 100 பந்துகளுக்கு மேல் பிடித்த அவர் தேவையில்லாமல் சிக்ஸ் அடிக்க முயன்று அவுட் ஆனது ரசிகர்களின் கோபத்தை கிளறியது.

இந்நிலையில் கவாஸ்கர் முட்டாள் முட்டாள் என கூறியது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் கம்பீர் கூறுகையில் உங்கள் விருப்பத்திற்கு ஷாட் களை களத்தில் ஆடினால் பெஞ்ச் தான் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள போட்டியில் பண்ட் க்கு பதிலாக துருவ் ஜூரல் விளையாட உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.