ஹைப்பர் டென்ஷன்(BP) குறைய மாத்திரை வேண்டாம்!! இந்த மூலிகை வைத்தியங்களை பின்பற்றுங்கள்!

இன்று பலரும் ஹைப்பர் டென்ஷன் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இது ஒரு சைலன்ட் கில்லராகும்.உடலில் ஹை பிபி இருந்தால் அது ஆரோக்கியத்தை பெரியளவில் பாதித்துவிடும்.மோசமான வாழ்க்கைமுறை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த இரத்த அழுத்த பாதிப்பை கட்டுக்குள் வைக்க தவறினால் மாரடைப்பு,பக்கவாதம் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த இரத்த அழுத்த பாதிப்பை குறைக்க மருந்து மாத்திரை உட்கொள்வதை இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

தீர்வு 01:

1)பூண்டு பற்கள்

தினமும் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.பூண்டில் உள்ள
அலிசின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த குறைக்கிறது.உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினம் ஒரு பூண்டு பல் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.

தீர்வு 02:

1)செம்பருத்தி இதழ் பொடி
2)தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி இதழ் பொடி சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தீர்வு 03:

1)ஆலிவ் இலை

சிறிதளவு ஆலிவ் இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தீர்வு 04:

1)கொய்யா இலை
2)தேன்

ஒரு கப் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று கொய்யா இலைகளை நறுக்கி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து அருந்தினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தீர்வு 05:

1)வாழைப்பழம்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.