வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!..

0
177
No plans to extend deadline for filing income tax returns? Income Tax officials information!..
No plans to extend deadline for filing income tax returns? Income Tax officials information!..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கும் திட்டம் இல்லை? வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!..

இந்த வருடம் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரல் மாதத்தில்  தொடங்கியது.இவை ஒரு  ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.

அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யமானால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.

ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர்கள் வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம் மற்றும் ஜனவரி முதல் மார்ச் வரை ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். என வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுஞ்செய்திகள்மற்றும் இ-மெயில் வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வருமான வரி கணக்குளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்தது.

அதே போல இந்தாண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் இணையதளத்தில் பரவி வந்த நிலையில் அதற்கு எவ்வித திட்டம் இல்லை என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதையும் மீறி உச்ச வரம்பை தாண்டும் அனைவரும் அபராதம் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்றார்.

Previous articleஇந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு!
Next article“இந்திய கிரிக்கெட் பற்றி எதுவும் பேசக்கூடாது…” தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ அறிவுரை!