ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் இனி இதற்கு தடை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
70

தமிழ்நாட்டில் ஊரடங்கு காலம் முடிவடையும் வரையில் பராமரிப்பு பணிகளுக்காக முன்னெடுக்கப்படும் மின் தடைசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நோய் தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டில் இருப்பதாலும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே பணிபுரிவதால் காரணமாகவும், மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடப்பதன் காரணத்தாலும் தடையில்லாத மின்சாரம் வழங்கும் விதமாக தமிழக மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்படும் மின்தடை காண அனுமதி ஊரடங்கு முடிவடையும் வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்ற 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆறு மாத காலமாக எந்த விதமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால், ஆங்காங்கே மின்தடை உண்டானது தற்சமயம் மிகவும் அவசியமான தவிர்க்க இயலாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்ட பிறகு பராமரிப்பு பணிகள் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் நடைபெறும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.