பருப்பு மற்றும் பாமாயில் இல்லை.. இம்மாதம் முழுவதும் இப்படித்தான்? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!!
தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் குடும்ப அட்டை மூலம் மலிவு விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் அரிசி முதல் சர்க்கரை பாமாயில் என அனைத்தும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி காய்கறிகளின் விலை ஏற்ற மற்றும் இறக்கத்திற்கேற்ப அவ்வபோது அதனையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.
நியாய விலைக் கடைகளை நம்பி குடும்பத்தை நடத்துபவர் பலர் இங்கு உள்ளனர். இந்நிலையில் மாதம்தோறும் முதல் 10 தேதிகளுக்குள்ளேயே சர்க்கரை அரிசி பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்படும். ஆனால் தற்பொழுது தேதி 14-யை கடந்தும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாரியான நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதன் தேவை அதிகரித்திருப்பதால் தற்பொழுது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் இந்த பொருட்களுக்கு குறைந்த அளவிலான தொகையையே இதற்கென்று வசூல் செய்கின்றனர்.
வெளி கடைகளை காட்டிலும் இது மிகவும் குறைவு. அதனால் பெரும்பாலான வீடுகளில் பருப்பு சர்க்கரை பாமாயில் ஆகியவற்றை வாங்கி உபயோகிப்பது வழக்கம். தற்பொழுது இதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேற்கொண்டு இந்த தட்டுப்பாட்டை நீக்கி மக்களுக்கு சரிவர பொருட்கள் கிடைக்க வழிவகுக்குமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.