இரவு தூக்கமே இல்லையா? அப்போ இந்த பயிற்சி செய்யுங்கள்.. அடுத்த 5 நிமிடத்தில் தூக்கம் சொக்கிக்கிட்டு வரும்!!

0
3

இன்றைய காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக தூக்கமின்மை உள்ளது.நம் உடல் சீராக இயங்க தூக்கம் அவசியமான ஒன்றாகும்.நன்றாக உறங்கினால் தான் நோய் நொடியின்றி வாழ முடியும்.ஆனால் இன்று நமக்கு இருக்கும் பெரிய நோயே தூக்கமின்மை தான்.

உரிய நேரத்தில் உடலுக்கு கொடுக்காததால் உடல் சோர்வு மட்டுமின்றி மன அழுத்தம் மனசோர்வு ஏற்படுகிறது.காலையில் எழுந்ததில் இருந்து உடல் உழைப்பில் ஈடுபடும் நாம் இரவு நேரத்தில் உரிய ஓய்வு கொடுத்தால் தான் உடல்,மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.

வேலைப்பளு,உடல் நலப் பிரச்சனை,குடும்பப் பிரச்சனை,கடன் பிரச்சனை என்று பல காரணங்களால் தூக்கத்தை தொலைத்து வருகிறோம்.இரவு நேரத்தில் தான் தூக்கத்தை கெடுக்கும் பல எதிர்மறை சிந்தனைகள் நம் மனதில் தோன்றுகிறது.தூக்கத்திற்கு மாத்திரை எடுத்துக் கொண்டால் அதுவே பழக்கமாகிவிடும்.அது மட்டுமின்றி அதிகளவு தூக்கமாத்திரை எடுத்துக் கொள்வது நம் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

இயற்கையான முறையில் தான் தூக்கத்தை வரவழைக்க வேண்டும்.மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தியானம்,யோகா போன்றவற்றை செய்யலாம்.இது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

அது மட்டுமின்றி மேலும் சில பயிற்சிகள் மூலம் தூக்கத்தை வரவழைக்கலாம்.தினமும் தூங்குவதற்கு முன்னர்அமர்ந்து கொள்ள வேண்டும்.பின்னர் இரு காதுகளிலும் கைகளை மூடிக் கொள்ள வேண்டும்.கைகளை மூடுவது திறப்பது போன்று தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு செய்தால் தூக்கம் வரும்.அதேபோல் வலது உள்ளங்கையில் இடது கை கட்டை விரல் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தம் கொடுத்தால் தூக்கம் வரும்.தூக்க மாத்திரைக்கு பதில் இந்த விஷயத்தை செய்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.

Previous articleஇந்த ஒரு விஷயம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை ஸ்பாயில் பண்ணும்!! படிப்பில் ஆர்வமின்மை ஏற்பட இதுவே காரணம்!!
Next articleடாக்டர் சீக்ரெட்! தினமும் 60 நிமிடம் இதை செய்தால்.. நோய் நொடியின்றி 100 வயது வரை வாழலாம்!!