இலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்

0
162

இலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபயா ராஜபக்சே சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று அந்நாட்டின் அமைச்சரவை விரிவாக்கப்பட்டது

மொத்தம் 35 மந்திரிகள் மற்றும் 3 துணை மந்திரிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் இவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை என்ற சோகமான செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி 16 மந்திரிகளுடன் கோத்தாபய ராஜபக்ச பதவி ஏற்ற நிலையில் தற்போது அமைச்சர்கள் விரிவாக்கம் நடந்தது

இதில் கோத்தபாய ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவிற்கு வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது. இதனை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் மூவர் தற்போது அதிகாரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மொத்தமுள்ள 38 மந்திரிகளில் முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இருந்ததால் அந்த கோபத்தில் அவர் தமிழர்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் மந்திரி சபையை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு
Next articleஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: மீண்டும் சென்னை அணிக்கு ஏமாற்றம்