சோதனையில்லாமல் இவர்களெல்லாம் வெளிமாநில பயணம் செல்லலாம்!

Photo of author

By Anand

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கை தற்போது சில தளர்வுகளுடன் தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் அங்கு மட்டும் சில கட்டுபாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து வெளியில் செல்வோர்கள் மற்றும் சென்னைக்கு செல்வோர் என அனைவருக்கும் இ பாஸ் வழங்குவதில் கெடுபிடி காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது’தொழில் ரீதியாக அண்டை மாநிலம் சென்று 48 மணி நேரத்திற்குள் திரும்பும் நபர்களுக்கு சோதனை வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்குத் தொழில் சம்பந்தமாக செல்பவர்களை அனுமதிக்கலாம்.

மேலும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்ய இ- பாஸ் கட்டாயம் தேவை” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.