நம் உடல் திடமாக இருக்க எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.ஆனால் சிலருக்கு கால்சியம் குறைபாட்டால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.அதேபோல் விபத்து காரணமாக எலும்பு முறிவு,எலும்பில் அடிபடுதல் போன்றவை ஏற்படுகிறது.
உடல் எலும்புகள் இளமை காலத்தில் உறுதியாகவும்,ஆரோக்யமாகவும் இருந்தால் மட்டுமே வயதான பிறகு எலும்பு சார்ந்த பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க முடியும்.ஆனால் தற்பொழுது இளைய தலைமுறையினர் எலும்பு சம்மந்தபட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே எலும்பு வலிமையை அதிகரிக்க சில விஷயங்களை கட்டாயம் செய்து வாருங்கள்.
எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை இதோ.
தேவைப்படும் பொருட்கள்:-
*ராகி – கால் கப்
*கருப்பு எள் – ஒரு தேக்கரண்டி
*பனங்கற்கண்டு – 25 கிராம்
செய்முறை:-
கருப்பு எள் மற்றும் ராகியை கருகிடாமல் தனி தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பனங்கற்கண்டு போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் இந்த பவுடரை கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து பருகி வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:
*கருப்பு உளுந்து – இரண்டு தேக்கரண்டி
*பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி
*ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
*ஏலக்காய் – ஒன்று
*பாதாம் பருப்பு – ஐந்து
செய்முறை:-
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வாணலியில் போட்டு குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுத்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அரைத்த பொடியை கொட்டி நன்றாக காய்ச்சி நாட்டு சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.