தமிழகத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி இன்று முதல் 24 ஆம் தேதி வரை ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக கொடுக்கவும், ரேஷன் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி ஊதியம் உயர்த்தி வழங்குவது போன்ற சில கோரிக்கைகளை முன்னெடுத்து ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் மற்றும் சில கோரிக்கைகளுக்காக இது போன்ற போராட்டங்களை நடத்திய பொழுது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தது போலவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ரேஷன் கடை ஊழியர்களை கண்டறிந்து அவர்களின் பெயர் பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் இருக்கும்பட்சத்தில் ரேஷன் கடைகளில் மாற்று ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களுக்கு ரேசன் பொருட்கள் இதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் கிடைத்திட அரசு வலியுறுத்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பணிக்கு வராத ஊழியர்களுக்கு no work no pay என்பதன் அடிப்படையில் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்த போது அவர்களின் பெயர்களை கண்டறிந்து அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படும் என்பது போல எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.