வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்!
கர்ப்பிணிப் ஐடி ஊழியர்!
சென்னைக்கு அருகே ஊரடங்கு ஏற்பட்டதால் வேலை வருமானமின்றி தவித்து வந்த கணவன் மனைவி இருவரும் ஆடு திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் சார்ந்த ஆலங்குப்பம், நெட்குப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி காணாமல் போயிருந்ததுள்ளது.
ஆட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கின்றனர். சாலை வெறிச்சோடி கிடப்பதை அறிந்த இவர்கள் இதைப் பயன்படுத்தி நிறைமாத கர்ப்பிணி காவிரியும் அவரது கணவரும் இருசக்கர வாகனத்தில் சென்று அங்கு வழியில் படுத்து கிடந்த ஆடுகளை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் செல்ல முற்பட்ட இருந்திருக்கின்றனர்.
இதனை கண்ட அந்த பகுதி இளைஞர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்த எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காவல் ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில்,
காவிரியும் கார்த்திக்கும் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் ஓராண்டுக்கு முன்பாக செய்து கொண்டனர்.
கர்ப்பிணி பெண் காவேரி ஒரு ஐடி ஊழியர் எனவும், ஊரடங்கு காரணமாக வேலை பறிப்போய்விட்டதாகவும் மற்றும் அவரது கணவர் கார்த்திக் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இருவரும் வேலையின்றி வருமானம் இல்லாமல் தவித்து அதனால் இந்த மாதிரியான திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடுகள் 3 ஆயிரம் வரை விற்கப்பட்டதால் நல்ல லாபம் வருகிறது என்று நினைத்து ஆடுகளை திருடி விற்றுள்ளனர். தொடர்ந்து இந்த மாதிரியான நிறைய ஆடுகளை தன்னுடைய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.