கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!!
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக கோவை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் அங்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அதேசமயம் அவரை எதிர்த்து திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர்கள் மூவருமே கடினமான போட்டியாளர்கள் என்பதால் இந்த முறை கோவை தொகுதி தான் அதிக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெரிதாக மீடியா முன்பு தோன்றவில்லை என்றாலும், அவர் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தீவிரமாக களப்பணிகளையும் செய்து வருகிறார். இதனால் தற்போது வரை கோவையில் திமுக கைதான் ஓங்கியுள்ளது.
இப்படி உள்ள சூழலில் கோவையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அதாவது கோவையில் உள்ள வட இந்தியர்கள் திடீரென ஒன்று கூடி திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் பேரணி சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மட்டுமல்ல பெரிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியர்கள் பாஜகவிற்கு ஆதரவாக அதாவது அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று அவர்களே கருதிய நிலையில், இந்த சம்பவம் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் திமுகவினருக்கு இந்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.